இத்தலம் குற்றாலத்திற்கு தெற்கே 2.5 கி. மீ. தொலைவில் உள்ளது. தென்காசியில் இருந்து 5 கி. மீ. தொலைவில் உள்ளது.
இலஞ்சி என்றால் மகிழமரம். முருகப்பெருமான் இங்கு மகிழ மரத்தின்கீழ் உள்ளார். தலவிருட்சம் மகிழ மரம். இத்தலம் மலைப்பகுதியில் அமைந்துள்ளது.
இத்தலத்தில் ஒரு சன்னதியில் மூலவர் வள்ளி தெய்வானையுடன் வரதராஜ குமாரன் என்ற பெயருடன் காட்சியளிக்கிறார். மற்றெhரு சன்னதியில் சிவபெருமான் இருவாலுக நாயகர் என்ற பெயருடனும், உமாதேவியார் மதுரவாணி (குழல்வாய்மொழி) என்ற பெயருடன் காட்சியளிக்கிறhர்கள்.
இத்தலத்தில் வைகாசி விசாகம், ஆடிக்கிருத்திகை, கந்தர் சஷ்டி மற்றும் மாசிப் பெருவிழா ஆகியவை சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. |